search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மர்ம மரணம்"

    அரக்கோணம் அருகே கழிவுநீர் கால்வாயில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ரகுபதி இவரது மனைவி அம்சா (எ) வள்ளி (வயது 40). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். ரகுபதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அம்சா எந்தவித ஆதரவுமின்றி அந்த பகுதியில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் திரு.வி.க.தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அம்சா இன்று காலை இறந்துகிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அரக்கோணம் கிராம நிர்வாகி வேலுவிற்கும் அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் அம்சா உடலில் காயங்கள் இருந்தன எனவே அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழந்ததில் ஏற்பட்ட காயங்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை பெற்ற 18 நாளில் பெண் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் ஆண்டிபட்டி நாச்சியார் புரத்தை சேர்ந்த ராஜகோபால் மகள் மீனாவிற்கும் கடந்த 2½ வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் பெண் குழந்தையும், 18 நாளில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீனாவின் தந்தை ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் மீனா தற்கொலை செய்யவில்லை. அவரை கணவரும், மாமியாரும் சேர்ந்து அடித்துக்கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடுவதாக குறிப்பிட்டு உள்ளார்.

    திருமணமான நாளில் இருந்தே கூடுதல் வரதட்சணை கேட்டு மீனாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தங்களிடம் கூட பேச அனுமதிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை அடிப்படையில் மீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் மணிகண்டன், அவரது தாயார் பாக்கியலட்சுமி, சகோதரி ராஜாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மீனாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    பெரம்பூரை சேர்ந்த ஒருவர் தனது தாய் சாவில் மர்மம் இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆறு மாதத்துக்கு முன் புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் ராஜாபாதர் தெருவை சேர்ந்தவர் லலிதா (63). கடந்த மார்ச் மாதம் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதுபற்றி அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த அவரது மகன் பாபுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் பெரம்பூர் திரும்பி வந்த சில நாட்களில் தாய் லலிதா இறந்து போனார்.

    இதையடுத்து அவரது உடல் பெரம்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதற்கிடையே பாபுவுக்கும் அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். பின்னர் அவர் அமெரிக்காவிற்கு திரும்பி செல்லவில்லை.

    இந்த நிலையில் லலிதா வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதாக பாபுவுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவரது மனைவி நந்தினி அவரது தங்கை சுதா மற்றும் தம்பி மீது போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து தாய் லலிதா சாவில் உள்ள மர்மம் குறித்து பாபு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். லலிதாவின் உடலை பரிசோதனை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி இன்று காலை பெரம்பூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டு இருந்தத லலிதாவின் உடலை 6 மாதத்திற்கு பின்னர் போலீசார் தோண்டி எடுத்தனர். அங்கேயே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    இந்த பரிசோதனை முடிவை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பாபுவின் மனைவி நந்தினியிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
    ×